இந்த வயதில் இப்படி ஒரு ஆட்டமா? நடனம் மூலம் மக்களை கவர்ந்த மூதாட்டி…..!

இன்றைய காலத்தில் சோசியல் மீடியா மூலம் சமூகத்தில் ஏராளமான பிரச்சனை இருந்தாலும், சில நன்மைகளும் இருக்கத்தான் செய்கிறது. பலர் அவர்களின் திறமைகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் ஒரு தளமாக சோசியல் மீடியா உள்ளது. இங்கு சிறியவர் பெரியவர் என்ற வயது வரம்பெல்லாம் கிடையாது.

சோசியல் மீடியாவில் யார் வேண்டுமானாலும் அவர்களின் திறமையை வெளிப்படுத்தலாம். அந்த வகையில் சமீபத்தில் 63 வயது மூதாட்டி ஒருவர் அவரின் நடன திறமையை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெற்று வருகிறார். ரவி பாலா சர்மா என்ற அந்த மூதாட்டி அவரது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் நடனமாடும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோவை கண்ட நெட்டிசன்கள் எப்படி அவரால் இந்த வயதில் இவ்வளவு எனர்ஜியுடன் மிகவும் சுறுசுறுப்பாக நடனமாட முடிந்தது என ஆச்சரியத்தில் வாயை பிளந்து வருகிறார்கள். மேலும் சர்மாவின் வீடியோவிற்கு லைக்குகளையும் கமெண்டுகளையும் குவித்து வருகிறார்கள்.

தனுஷ், அக்‌ஷய் குமார், சாரா அலி கான் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படம் தான் அத்ராங்கி ரே. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள சக்கா சக் பாடலுக்கு தான் சர்மா நடனமாடி உள்ளார். இவரின் இந்த நடனம் இணையத்தில் பலரது மனதை கவர்ந்துள்ளது.

வயது என்பது வெறும் எண்ணிக்கை தான் என்றும், திறமையை நிரூபிக்க வயது ஒரு தடை அல்ல எனவும் சர்மா இந்த வீடியோ மூலம் மக்களுக்கு நிரூபித்துள்ளார் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். மேலும் பலர் சர்மா தங்களுக்கு ரோல் மாடலாக இருப்பதாகவும் கூறி வருகிறார்கள்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment