#Breaking…. இனி வாரந்தோறும் சனிக்கிழமையும் சார்பதிவாளர் அலுவலகம் செயல்படும்…!
நம் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் பின்பு பல்வேறு அரசு அலுவலகங்களில் பணி நேரம் மாற்றப்பட்டு வருகிறது. அதுவும் குறிப்பாக ஜனவரி மாதம் ரேஷன் கடை ஞாயிற்றுக்கிழமையும் செயல்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏனென்றால் குடும்ப அட்டைதாரர்கள் பயன்படும் வகையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க மாதம் முழுவதும் ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மற்றொரு அலுவலகமும் சனிக்கிழமை செயல்படும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதன்படி சார்பதிவாளர் அலுவலகங்கள் அனைத்தும் இனி ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகரித்துள்ளன ஆவணப்பதிவுகளுக்கு ஏதுவாக சனிக்கிழமையும் சார்பதிவாளர் அலுவலகம் செயல்படும்.
விடுமுறைக்கால ஆவண பதிவு கட்டணமாக 200 ரூபாய் மட்டும் கூடுதலாக வசூலிக்கப்படும் என்று அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார். ஆவண பதிவிற்கான டோக்கன் அனைத்து வேலை நாட்களிலும் அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார். இதனால் ஆவணப் பதிவு செய்பவர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
