Connect with us

ஓபிசி இட ஒதுக்கீடு மசோதா மக்களவையில் நிறைவேறியது!!

News

ஓபிசி இட ஒதுக்கீடு மசோதா மக்களவையில் நிறைவேறியது!!

68a88d4f24cf3c8e043f6bad475a2744

தற்போது தமிழகத்தில் உள்ள சில மாணவர்கள் மத்தியில் ஒரு கல்வித்துறை படிக்கும் எண்ணமே போனது என்றே கூறலாம். மேலும் அதனை மருத்துவத்துறை என்று கூறலாம். காரணம் என்னவெனில் தமிழகத்தில் சில வருடங்களாக நீட்தேர்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கு பல கட்சியினரும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர், மேலும் தற்போது உள்ள ஆளுங்கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் ஒழிப்பு குறித்து கூறப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வரை தமிழகத்தில் நீட் தேர்வு ஒழிப்புக் குறித்தான எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.a9b0b027e0090a3d0fd6a4c3d7e838cb-2

மேலும் சில வருடங்கள் முன்பாக இந்த  தேர்வில் தோல்வியடைந்த அனிதா என்றவர் தற்கொலை செய்துகொண்டார். அது தமிழகத்தில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இதற்கு எதிர்ப்புகளும் அதிகரித்தது. இந்த சூழலில் தற்போது மருத்துவ படிப்பில் மேலும் சில முக்கிய அறிவிப்புகள் வெளியாக உள்ளது. அதன்படி ஓபிசி இட ஒதுக்கீடு மசோதா தற்போது மக்களவையில் நிறைவேற்றியதாக கூறபடுகிறது.

அதன்படி மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு ஒதுக்கீடு அளிக்கும் மசோதா நிறைவேற்றப் பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஓபிசி பட்டியல் தயாரிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் அளிக்கும் மசோதா தற்போது மக்களவையில் நிறைவேறியது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதில் அரசியல் சட்ட திருத்தத்துக்கு ஆதரவாக 385 உறுப்பினர்கள் வாக்களித்ததும் குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top