Connect with us

விஜய் படபாணியில் வீடியோகாலில் பிரசவம் பார்த்த நர்ஸ், குழந்தை இறந்த பரிதாபம்

baby

தமிழகம்

விஜய் படபாணியில் வீடியோகாலில் பிரசவம் பார்த்த நர்ஸ், குழந்தை இறந்த பரிதாபம்

தவறான நண்பன் திரைப்பட பாணியில் பிரசவம் பார்த்த செவிலியர்கள் இறந்து பிறந்த குழந்தை மருத்துவரை கண்டித்து உறவினர்கள் சாலை மறியல்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள சூனாம்பேடு ஆண்டார்குப்பம் பகுதியை சேர்ந்தவர் முரளி (36) இவர் அப்பகுதியில் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வருகிறார் இவரது மனைவி புஷ்பா வயது (33) இவர் இரண்டாவதாக கருத்தரித்து இருந்த நிலையில் மருத்துவரால் பிரசவ தேதி இன்று அறிவித்து இருந்த நிலையில் நேற்று காலை சூனாம்பேடு இல்லிடு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார் வலி எடுத்தால் வந்து மருத்துவமனையில் சேர்ந்து கொள்ளும்படி மருத்துவர்கள் தெரிவித்த நிலையில் புஷ்பாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது

சூனாம்பேடு இல்லிடு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு புஷ்பா சென்றுள்ளார் அங்கு மருத்துவர்கள் யாரும் இல்லாத நிலையில் செவிலியர்கள் மட்டுமே மூன்று பேர் இருந்துள்ளனர் இதில் புஷ்பா தற்போது செய்த ஸ்கேன் ரிப்போர்ட்டில் பிரசவத்தில் பிரச்சனை உள்ளது என குறிப்பிட்டு இருந்துள்ளது இதனை செவிலியர்கள் சரிவர கவனிக்கவில்லை எனத் தெரிய வருகிறது

இதனை அடுத்து இங்கேயே சுகப்பிரசவம் பார்த்து விடலாம் என செவிலியர்கள் தெரிவித்ததின் பேரில் குழந்தை தலைகீழாக கால்கள் மட்டுமே வந்துள்ளது செய்வது அறியாது தவித்த செவிலியர்கள் மருத்துவர் ஒருவருக்கு போன் செய்து தகவலை தெரிவித்தனர் திரைப்பட பாணியில் வீடியோ கால் மூலம் பிரசவத்தை செய்யும்படி மருத்துவர் கூறியுள்ளார்

மருத்துவர் சொன்ன ஆலோசனைப்படி செவிலியர்கள் செய்துள்ளனர் எவ்வளவு முயன்றும் குழந்தையின் தலை மட்டும் வெளியே வரவில்லை இதனை அடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் ஆனால் குழந்தை வரும் வழியிலேயே இறந்து பிறந்துள்ளது

இதனை அடுத்து இல்லிடு மருத்துவமனை செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் அலட்சியப் போக்கால் குழந்தை இறந்து பிறந்ததாக குழந்தையின் உடலை பெற்றோர் மற்றும் உறவினர் வாங்க மறுத்து விட்டனர்

இந்நிலையில் இன்று மருத்துவமனைக்கு வராத மருத்துவரை கண்டித்தும் தவறான சிகிச்சை அளித்த செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் மதுராந்தகம் To சூனாம்பேட்டை சாலையில் சில்லியடு என்ற இடத்தில் மருத்துவமனை எதிரே சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர் 100க்கும் மேற்பட்டோர்

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top