அசுர வேகத்தில் வீசும் ஒமைக்ரான் அலை; பாதிப்பு எண்ணிக்கை 781 ஆக உயர்வு!

தென்னாப்பிரிக்க நாட்டில் தோன்றி இன்று உலகில் உள்ள பல நாடுகளில் மிகக் கொடிய வைரஸ் ஆக பரவிக்கொண்டு வருகிறது ஒமைக்ரான். இவை இந்தியாவிலும் ஆரம்ப காலகட்டத்தில் மெல்ல மெல்லப் பரவியது. ஆனால் தற்போது ஒமைக்ரானின் பரவல் வேகம் அதிகரித்துள்ளது.

ஒமைக்ரான்  

இதனால் இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு 781 ஆக உயர்ந்துள்ளது. அதன் படி இந்தியாவில் ஒமைக்ரான் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 781 ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய அரசு கூறியுள்ளது.

ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்களில் 241 பேர் டிஸ்சார்ஜ் ஆன நிலையில் 540 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் அதிகபட்சமாக டெல்லியில் 238 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்பின்னர் மகாராஷ்டிர மாநிலத்தில் 167 பேருக்கும், குஜராத் மாநிலத்தில் 73 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் அறுபத்தி ஐந்து பேருக்கு, தெலுங்கானாவில் அறுபத்தி இரண்டு பேருக்கும், ராஜஸ்தானில் நாற்பத்தி ஆறு பேருக்கும் தமிழ்நாடு கர்நாடகாவில் தலா 34 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே ஒமைக்ரான் பாதிப்பு இந்தியாவில் அதிவேகத்தில் பரவுவது தெரிகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment