வேகத்தை மாற்றிய ஒமைக்ரான்! இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 422 ஆக உயர்வு!!

உலகமெங்கும் அதிதீவிர வேகத்தில் பரவிக் கொண்டு வருகிறது ஒமைக்ரான் இவை இதற்கு முன்பு தோன்றிய கொரோனா அலையை விட அதிகம் வீரியம் உள்ளதாக காணப்படும் என்றும் மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். இந்த நிலையில் இந்த ஒமைக்ரான் தற்போது இந்தியாவில் அதிக அளவு பரவிக்கொண்டு வருகிறது.

ஒமைக்கிரான்

ஆரம்ப காலகட்டத்தில் மெல்ல மெல்ல பரவிய ஒமைக்ரான் கடந்த சில நாட்களாக அதி தீவிரமாக பரவி வருகிறது. இதனால் இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு 422 ஆக உயர்ந்துள்ளது. அதன்படி இந்தியாவில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 422 ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் நூத்தி எட்டு பேருக்கும், டெல்லியில் 79 பேருக்கும், குஜராத்தில்  நாற்பத்தி மூன்று பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் 40 பேருக்கும், கேரள மாநிலத்தில் 38 பேருக்கும், தமிழகத்தில் 34 பேருக்கும் கர்நாடகாவில் 31 பேருக்கும், ராஜஸ்தானில் 22 பேருக்கும் ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 130 பேர் குணமடைந்து வீடு திரும்பினார் என்றும் சுகாதாரத்துறை கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment