டெல்லியில் கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா! பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது!!

எதிர்பாராத விதமாக இந்தியாவில் ஆட்கொல்லி நோய் தாக்கம் மீண்டும் அதிகமாகிக் கொண்டே வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவின் பெரும் முயற்சியால் கொரோனா நோய் கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதி முதல் கொரோனாவின் பாதிப்பு இந்தியாவில் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது.

கொரோனா

அதோடுகூட தென் ஆப்பிரிக்கா நாட்டில் தோன்றிய ஒமைக்ரான் பாதிப்பும் இந்தியாவில் அதிவேகத்தில் பரவிக்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தலைநகர் டெல்லியில் அடுத்தடுத்து கொரோனா எண்ணிக்கை உச்சத்தை அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி டெல்லியில் கொரோனா  பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியதாக தகவல் கிடைத்துள்ளது. டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 665-ஆக உள்ளது. டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்க்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இதனால் டெல்லியில் அடுத்தடுத்த சோகமான நிகழ்வுகளை வரிசையாக நடந்து கொண்டு வருகிறது. ஏனென்றால் சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் காற்று மாசுபாட்டின் பாதிப்பும் அதிகமாக காணப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் அங்கு வாழும் மக்கள் மிகுந்த அவஸ்தையில் காணப்படுகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment