வடகிழக்கு பருவமழை 54% அதிகம்! கண்டிப்பாக காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறாது!!

கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் அதே தமிழகத்தில் பல இடங்களில் மழை நீர்த்தேக்கத்தை உருவாக்கி உள்ளது. இது குறித்து தற்போது சில தகவல்கள் வெளியாகி உள்ளது.

வடகிழக்கு பருவமழை

ஏனென்றால் நம் தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியது முதலே வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை 54 சதவீதம் அதிகமாக பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

பாலச்சந்திரன்

சென்னையில் வடகிழக்கு பருவமழை 69 சதவீதம் அதிகம் பெய்துள்ளது என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். அக்டோபர் முதல் டிசம்பர் வரை செய்யவேண்டிய வடகிழக்கு பருவமழை இப்போதே பெய்துவிட்டதாகவும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

கன்னியாகுமரியில் வழக்கத்தை விட 9 மடங்கு அதிக கனமழை பெய்து உள்ளது என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். நவம்பர் 12-ஆம் தேதி முதல் நவம்பர் 15ஆம் தேதிக்குள் 9 மடங்கு அதிக மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறாது என்றும் கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment