ஒரு வழியா தமிழ்நாட்டை விட்டு ஓடியது வடகிழக்கு பருவமழை…! வந்துவிட்டது வறண்ட வானிலை!!
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முழுவதும் நம் தமிழகத்தில் அதிதீவிர கனமழை பெய்தது. இதன் விளைவாக தமிழகத்தில் பெரும்பாலான நாட்களில் ரெட் அலார்ட் ஒதுக்கப்பட்டிருந்தது. தமிழகத்தில் உள்ள அனைத்து ஏரிகள், அணைகள் முழுவதும் தனது கொள்ளளவை எட்டின.
இதற்கு முழு காரணமாக இருந்தது 2021 ஆம் ஆண்டு தொடங்கிய வடகிழக்கு பருவமழை தான். இந்த நிலையில் டிசம்பர் மாதத்திற்கு பின்பு மெல்ல மெல்ல வடகிழக்கு பருவமழையின் தாக்கம் படிப்படியாக குறைந்தது.
இவ்வாறு உள்ள நிலையில் இன்றைய தினம் முதல் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விலகியுள்ளது. அதன்படி புதுச்சேரி, தமிழ்நாடு, காரைக்கால், கடலோர ஆந்திரா உட்பட தென்னிந்திய பகுதிகளில் இருந்து வடகிழக்கு பருவமழை விலகியது.
ரயலசீமா, தெற்கு உள் கர்நாடகா, கேரளா பகுதிகளில் இருந்தும் வடகிழக்கு பருவமழை இன்று விலகியது என்று வானிலை ஆய்வு மையம் கூறியது. இதனால் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலையே நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
