Connect with us

போலீசிடமே கஞ்சா வேண்டுமா? வசமாக சிக்கிய வடமாநில இளைஞர்கள்..!

kancha

செய்திகள்

போலீசிடமே கஞ்சா வேண்டுமா? வசமாக சிக்கிய வடமாநில இளைஞர்கள்..!

கஞ்சா போதையில் கஞ்சா விற்ற வட மாநில இளைஞர்கள் ரோந்து போலீசிடம் கஞ்சா வேண்டுமா என கேட்டு சிக்கிய சம்பவம், சாலை ரோந்து பணியில் ஈடுபட்ட தனிப்படை போலீஸ் இடமே கஞ்சா வேண்டுமா? என கேட்டு சிக்கிய மூன்று வட மாநில இளைஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

கோவை மாவட்டம், சோமனூர் பகுதியில் தனி படை போலீஸ்சார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீசார் இடமே கஞ்சா போதை தலைக்கு ஏறியதால் தான் என்ன செய்கிறோம் என்று கூட தெரியாமல், வட மாநில இளைஞர்கள் மூவர், தனிப்படை போலீசாரிடம் கஞ்சா வேண்டுமா? என்று கேட்டுள்ளனர்.

இதனையடுத்து மூவரையும் பிடித்த தனிப்படை போலீசார், கருமத்தம்பட்டி காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் போதையிலேயே பல்வேறு விஷயங்களை உலறினர்.

அதில் ஒடிசா பகுதியை சேர்ந்த சுமர்நாத், ஒடிசாவில் இருந்து ரயில் மூலம் கஞ்சாவை கடத்தி வந்து, பரமக்குடியை சேர்ந்த வெங்கடேஸ்வரன், கருமத்தம்பட்டி பகுதியை சேர்ந்த கோபிநாத் என்ற இருவருடன் சேர்ந்து வடமாநில இளைஞர்களுக்கு கஞ்சாவை விற்று வந்ததும், கஞ்சாவை புகைத்துக் கொண்டு போலீசாரிடம் கஞ்சா வேண்டுமா? என கேட்டதும் தெரிய வந்தது.

பின்னர் மூவர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், மூன்று கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top