செய்திகள்
அதிபர், பிரதமர் இல்லங்களுக்கு எதிரே போராட்டம்..!! மே இரண்டாம் தேதி நம்பிக்கை இல்லா தீர்மானம் தாக்கல்…!!!
இலங்கையில் நாளுக்கு நாள் மக்களின் போராட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஏனென்றால் இலங்கையில் தினம்தோறும் பொருளாதார நெருக்கடி அதிகரித்து கொண்டே வருகிறது.
இதனால் இலங்கை அதிபர் மற்றும் பிரதமர் வீடு எதிரே மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கொழும்பு இலங்கை அதிபர் மற்றும் பிரதமரை வீடுகள் எதிரே மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இரு இடங்களிலும் தற்காலிக கிராமங்களை உருவாக்கிய முழக்கங்களை எழுப்பி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் எதிர்க்கட்சியினர் ஒன்றாக இணைந்து அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்ற உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியாகி கொண்டு வந்தது.
அதன் ஒரு கட்டமாக இலங்கையில் அரசுக்கு எதிராக மே இரண்டாம் தேதி நம்பிக்கையில்லாத் தீர்மானம் தாக்கல் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற சபாநாயகரிடம் தீர்மானத்தை கொடுக்க உள்ளதாக அறிவித்தது ஐக்கிய மக்கள் சக்தி கட்சி.
