ஒமைக்ரான் தாக்கம் காரணமாக இந்தியாவில் ஒவ்வொரு மாநில அரசுகளும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. அதோடு வெளிநாட்டு பயணிகளை விமான நிலையத்தில் வைத்து பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றனர். ஆயினும் இந்தியாவிலும் ஒமைக்ரான் தாக்கம் மிக வேகமாக பரவுகிறது.
இதன் விளைவாக இந்தியாவில் உள்ள சில மாநிலங்களில் தற்போது வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக உத்தரபிரதேச மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கை அம்மாநில அரசு அறிவித்திருந்தது. கேரள மாநில அரசும் டிசம்பர் 30-ஆம் தேதி முதல் ஜனவரி இரண்டாம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என்று கூறியுள்ளது.
இந்த நிலையில் உத்தரகாண்ட் மாநில அரசும் இரவு நேர ஊரடங்கு அறிவித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று இரவு முதல் மறு உத்தரவு வரும் வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அம்மாநில காவல்துறையினர் கூறியுள்ளனர். இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்குமென்றும் உத்தரகாண்ட் காவல்துறை கூறியுள்ளது.