Connect with us

அம்பேத்கர் சிலை திறப்பு! மேற்கு மாவட்டங்களில் அம்பேத்கருக்கு சிலை இல்லை என்ற அவப்பெயர் நீங்கியது!!

ambedkar pti

தமிழகம்

அம்பேத்கர் சிலை திறப்பு! மேற்கு மாவட்டங்களில் அம்பேத்கருக்கு சிலை இல்லை என்ற அவப்பெயர் நீங்கியது!!

அம்பேத்கர் சிலை திறப்பு! மேற்கு மாவட்டங்களில் அம்பேத்கருக்கு சிலை இல்லை என்ற அவப்பெயர் நீங்கியது!!

இன்றைய தினம் குடியரசு தினமாக இருந்தாலும் அரசு திட்டமிட்ட படி தனது வேலைகளை செய்து கொண்டு தான் வருகிறது. அதன் வரிசையில் இந்த ஆந்திராவில் 13 மாவட்டங்களை இருபத்தி ஆறு மாவட்டங்களாக மாநிலத்தை பிரித்து அறிவித்திருந்தது.

தமிழகத்திலும் பல்வேறு நலத்திட்டங்கள் அரங்கேறிக் கொண்டுதான் வருகிறது. அவற்றில் ஒன்று தான் இன்றைய தினம் அம்பேத்கர் சிலையை திறந்து வைப்பு. அதன்படி ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் நிறுவப்பட்டுள்ள அம்பேத்கர் சிலையை திறந்து வைத்தார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்.

காணொலி காட்சி மூலம் அம்பேத்கர் சிலையை திறந்து வைத்தார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின். இது குறித்து எழுத்தாளர் மதிவண்ணன் கருத்தினை பதிவு செய்துள்ளார். அதன்படி அம்பேத்கர் சிலை திறக்கப்பட்டது இந்தத் தலைமுறைக்குக் கிடைத்த வெற்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

மேற்கு மாவட்டங்களில் சமத்துவம் இன்னும் ஓங்கி ஒலிக்கும் என்பதை இது உணர்த்துகிறது என்றும் கூறினார். குடியரசு தினத்தில் அம்பேத்கருக்கு மேற்கு மண்டலம் செய்திருக்கும் மிகப்பெரிய மரியாதை இது என்றும் கூறினார்.

மேற்கு மாவட்டங்களில் அம்பேத்காருக்கு சிலை இல்லை என்ற அவப்பெயர் நின்று நீங்கி உள்ளது என்றும் முதலமைச்சருக்கு நன்றி என்றும் எழுத்தாளர் மதிவண்ணன் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top