தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் கடந்த 13ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது என்பது தெரிந்ததே. இந்த படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வசூலை குவித்து உள்ள நிலையில் நேற்று நள்ளிரவு முதல் இந்த படம் அமேசான் பிரைமில் வெளியானது
ஓடிடியில் நல்ல தரத்துடன் இந்த படம் வெளியானதை அடுத்து இதுவரை மோசமான தரத்துடன் திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியாகிக் கொண்டிருந்த மாஸ்டர் திரைப்படம் நேற்று ஓடிடியில் வெளியான அடுத்த நிமிடமே நல்ல தரத்துடன் வெளியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
பெரும்பாலான திருட்டுத்தனமாக இணையதளங்களில் மாஸ்டர் திரைப்படத்தின் ஒரிஜினல் பிரிண்ட் போலவே இருக்கும் பிரிண்ட் வெளியாகியுள்ளது படக்குழுவினர்களை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஓடிடியில் வெளியானால் வரும் ஆபத்து இது என்று ஏற்கனவே படக்குழுவினர்களுக்கு திரையரங்கு உரிமையாளர்கள் எச்சரித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
தற்போது அமேசானில் பார்க்கும் பார்வையாளர்களை விட திருட்டுத்தனமாக ஓசியில் திருட்டு இணையதளத்தில் பார்க்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
இருப்பினும் அமேசானில் பார்க்கும் ரசிகர்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர் என்பதும் மாஸ்டர் திரைப்படத்தால் அமேசான் சம்ஸ்கிரைபர்கள் அதிகரித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது