தீபாவளிக்கு அடுத்த நாளே காய்கறிகள் தாறுமாறாக விலை உயர்வு! சோகத்தில் வியாபாரிகள்;

தற்போது தமிழகத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இது தமிழகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவின் பல மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழை காரணமாக சென்னை கோயம்பேடு காய்கறி விலைகள் தாறுமாறாக விலை உயர்ந்துள்ளது.

கோயம்பேடு

ஏனென்றால் அங்கு காய்கறிகள் வரத்து குறைந்து காணப்படுகிறது. பெட்ரோல் விலை உயர்வும், தொடர் மழை காரணமும், லாரி வாடகை போன்றவற்றினால் கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் வரத்து தொடர்ந்து குறைந்து காணப்படுகிறது.

தீபாவளிக்கு முன்பு காய்கறி விலையானது தீபாவளிக்கு அடுத்த நாளே அதிக விலைக்கு விற்கப்பட்டது தெரியவந்துள்ளது. அதன்படி சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் தீபாவளிக்கு முன்பு வரை ரூபாய் 40 விற்கப்பட்டது. ஆனால் தீபாவளிக்கு மறுநாள் 50 ரூபாய் முதல் 55 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

சின்ன வெங்காயம் 30 ரூபாய்க்கு விற்ற நிலையில் தற்போது 40 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விற்கப்படுகிறது.தக்காளி 30 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது 55 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

கத்தரிக்காய் கிலோ 30 ரூபாய் விற்ற நிலையில் தீபாவளிக்கு மறுநாள் ரூபாய் 40 க்கு விற்கப்படுகிறது. கேரட்தீபாவளிக்கு முன்பு 50 ரூபாய் விற்கப்பட்ட நிலையில் தீபாவளிக்கு மறுநாள் 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

கோயம்பேடு

பீன்ஸ் 40 ரூபாய்க்கு விற்ற நிலையில் தற்போது 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. முருங்கைக்காய் 80 ரூபாய் விற்ற நிலையில் தற்போது 120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

பச்சை மிளகாய் 30 ரூபாய் பெற்று நிலையில் தற்போது கிலோ ஒன்றுக்கு 40ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வெண்டைக்காய் 40 ரூபாய், பீக்கங்காய் 40 ரூபாய், 40 ரூபாய் 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இஞ்சி 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. புடலங்காய் 30 ரூபாய்க்கும், முள்ளங்கி 25 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment