
News
அடுத்த கட்டுப்பாடு..? அதிரடி காட்டிய மத்திய அரசு!
இந்தியாவைப் பொறுத்தவரையில் அரிசி, கோதுமை, சர்க்கரை மற்றும் உருளைக்கிழங்கு போன்றவைகள் அத்தியாவசிய பொருட்களாக உள்ளன.இந்நிலையில் கடந்த சில மாதங்களாக விலைவாசி கடுமையாக உயர்ந்து வருகிறது. ரஷ்ய உக்ரைன் போர் இந்த விலைவாசி முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
இந்த சூழலில் உள்நாட்டில் சர்க்கரை போதிய அளவில் கையிருப்பில் உள்ளதா என்ற அடிப்படையில் வருகின்ற ஜூன் 1-ஆம் தேதியிலிருந்து சக்கரை ஏற்றுமதிக்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.
அதாவது வருகின்ற ஜூன் 1-ஆம் தேதி முதல் சர்க்கரை ஆலைகளில் சர்க்கரையை ஏற்றுமதி செய்வதற்கு முன்பாக உணவு மற்றும் பொது வினியோகத் துறையில் இயக்குனரின் அனுமதி வழங்கிய பிறகு ஏற்றுமதி செய்ய வேண்டும் என ஒரு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாள்தோறும் எவ்வளவு சர்க்கரை ஏற்றுமதி செய்யப்படுகிறது என்ற விவரங்களின் அடிப்படையில் உணவு மற்றும் பொது விநியோகத் துறைக்கு தினந்தோறும் தெரிவிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
மேலும், சர்க்கரை ஏற்றுமதியை முறைப்படுத்தவும் கண்காணிக்கவும் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நடப்பாண்டில் மட்டும் 100 மெட்ரிக் டன் சர்க்கரை ஏற்றுமதி செய்ய வேண்டும் என இலக்கு தெரிவித்துள்ளது. கடந்த வாரம் கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்தது குறிப்பிடத்தக்கது.
