அடுத்த காமெடி கிங் இவர்தான்….. பிரபல காமெடி நடிகருக்கு குவியும் வாய்ப்புகள்…..

சினிமால ஹீரோக்கள் எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் தாக்கு பிடிக்கலாம். ஆனால் காமெடி நடிகர்கள் அப்படி அல்ல. அவர்களின் காமெடி ரசிகர்களுக்கு பிடிக்க வேண்டும். அதைவிட முக்கியம் அதை பார்க்கும்போது சிரிப்பு வரவேண்டும். இல்லையெனில் அவ்வளவு தான்.

தமிழ் சினிமால ஒவ் காலகட்டத்திலயும் ஒரு காமெடி நடிகர் பிரபலமா இருந்துருக்காங்க. உதாரணத்துக்கு ஒரு சமயத்தில் காமெடினாலே அது கவுண்டமணி – செந்தில் தான். அப்பறம் வடிவேலு விவேக் வந்தாங்க. அவங்களுக்கு அப்பறம் சந்தானம் சூரி வந்தாங்க. இப்போ யோகி பாபு இருக்காரு.

ரெடின் கிங்ஸ்லி

இப்போ யோகி பாபுக்கு அடுத்ததா ஒரு காமெடி நடிகர் பிரபலமாகிட்டு இருக்காரு. அனேகமா வருங்காலத்தில இவரு தான் தமிழ் சினிமால காமெடி கிங்கா வருவாருனு தோணுது. அவரு வேற யாரும் இல்லைங்க டாக்டர் படத்துல சீரியஸான டயலாக்கையும் காமெடி பேசி சிரிக்க வச்சாரே நம்ம ரேடான் கிங்ஸ்லி அவரே தான்.

இயக்குனர் நெல்சனோட முதல் படமான கோலமாவு கோகிலா படம் மூலம் நடிகரா அறிமுகமானவர் தான் ரெடின் கிங்ஸ்லி. நடிகராகவும் அறிமுகமானார். அதை தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும், சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படம் தான் அவருக்கு ஒரு அங்கீகாரத்தை கொடுத்துச்சு.

டாக்டர் படத்தில ரெடின் கிங்ஸ்லி நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரியளவுல ரீச் ஆச்சு. இந்த படத்தில யோகி இருந்தாலும் அவருக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு கிங்ஸ்லியோட காமெடி இருந்துச்சு. இந்த படம் சிவகார்த்திகேயனுக்கு மட்டும் இல்லைங்க கிங்ஸ்லிக்கும் ஒரு பெரிய திருப்புமுனையா அமைஞ்சிருக்கு.

டாக்டர் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்துல நடிச்ச ரெடின் கிங்ஸ்லிக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்துகிட்டே இருக்குதாம். இப்போ மனுஷன் கைவசம் விஜய்யுடன் பீஸ்ட், சிவா உடன் இடியட், சிம்புவுடன் பத்து தல, சூர்யாவுடன் எற்கும் துணிந்தவன் என பல படங்கள் வரிசை கட்டி நிக்குதுங்க. இந்த படங்கள் எல்லாம் வெளியானதும் கிங்ஸிலியோட மார்க்கெட் வேற லெவலுக்கு போகபோகுது பாருங்க.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment