Connect with us

தமிழகமே அதிர்ச்சி..! வந்துவிட்டது புதிய வைரஸ்… அமைச்சர் தகவல்…

202109280713274665 Tamil News Tamil news Ma Subramanian when Mega Vaccination Camp SECVPF

Tamil Nadu

தமிழகமே அதிர்ச்சி..! வந்துவிட்டது புதிய வைரஸ்… அமைச்சர் தகவல்…

தமிழகத்தில் தற்போது பி4 என்ற புதிய ஒமைக்ரான் வைரஸ் பரவியுள்ளதாக மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் இருக்கும் தேசிய முதியோர் மருத்துவமனையில் ஆய்வு செய்த அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது இவ்வாறு தெரிவித்தார்.

கொரோனாவை பொறுத்தவரையில் ஆல்பா, பீட்டா, டெட்டா, டெல்டா பிளஸ் போன்ற நிறைய திரிபுகள் மாறிமாறி வந்ததாகவும் தற்போது ஒமைக்ரான் பி4 பரவியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிலையில் தமிழகத்தில் பகுப்பாய்வு கூடம் இருப்பதாகவும் இதனிடையே வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களிடன் பரிசோதனை செய்ததில் பி4 கண்டறியப்பட்டதாக அவர் கூறினார்.

குறிப்பாக செங்கல்பட்டு பகுதியில் உள்ள நாவலூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாகவும் உடனடியாக பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பியதில் இந்த வைரஸ் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Tamil Nadu

To Top