வரலாற்றின் புதிய உச்சம்; ஒரு கேண்டி பஞ்சு 1 லட்சமாக விற்பனை !!

உக்ரைன், ரஷ்யா போர் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வரும் நிலையில் கடந்த சில நாட்களாக பஞ்சின் விலை அதிகரித்தது.

குறிப்பாக பஞ்சின் விலை இரண்டு மடங்காக உயர்ந்ததால் பஞ்சு தட்டுப்பாடு ஏற்படும் என பஞ்சு உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் வெளிநாடுகளில் இருந்து பஞ்சு இறக்குமதி செய்ய வேண்டுமென மத்திய அரசு கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் தொடர் மழையின் காரணமாக பஞ்சு எண்ணிக்கை குறைந்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டினர். ஈரோடு ,மதுரை, ராஜபாளையம் போன்ற பகுதிகளில் செயல்பட்டு வரும் பஞ்சு ஆலைகளில் வரத்து குறைந்துள்ளதால் இ.எல்.எஸ் எனப்படும் செயற்கை இழை பஞ்சுக்கு அனுமதி வழங்க வேண்டும் தெரிவித்தனர்.

இந்த சூழலில் தமிழகத்தில் ஒரு கேண்டி பஞ்சு விலை ரூ 1 லட்சமாக அதிகரித்துள்ளது. இதனால் பஞ்சு வியாபாரிகளுக்கு பேரிடியாக அமைந்துள்ளது. குறிப்பாக நடப்பாண்டில் மட்டும் 40% என இருமடங்காக அதிகரித்துள்ளது.

இதனிடையே ஏற்கனவே ஒரு கேண்டில் 37 ஆயிரம் முதல் 45 ஆயிரம் வரை விற்பனையான நிலையில் தற்போது ஒரு கேண்டி பஞ்சு விலை ரூ 1 லட்சமாக அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment