Connect with us

“வணக்கம் ” சொல்லி பேசத்தொடங்கினார் தமிழகத்தின் புதிய ஆளுநர்!!

News

“வணக்கம் ” சொல்லி பேசத்தொடங்கினார் தமிழகத்தின் புதிய ஆளுநர்!!

2ef478454d440a4de3103a41a7e5a049

தமிழகத்தில் தற்போது திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சி நடைபெறுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் புதிய ஆளுநர் நியமிக்கப்பட உள்ளதாக சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆயினும் இன்றைய தினம் தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர் என் ரவி பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் தமிழ் மொழியில் வணக்கம் சொல்லி பேச தொடங்கியதாக கூறப்படுகிறது.9f3ed4f3409db91ba8d3cb1bb5ee5014

அதன்படி உலகின் தொன்மையான நாகரீகத்தை சேர்ந்த மக்கள் வாழும் தமிழகத்தில் ஆளுநராகப் பதவியேற்றது எனக்கு மகிழ்ச்சி என்று ஆளுநர் கூறியுள்ளார். மேலும் செய்தியாளர் சந்திப்பில் அவர் வணக்கம் சொல்லி பேசியுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் சென்னை ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

மேலும் இயன்ற அளவிற்கு தமிழக மக்கள் மற்றும் தமிழக அரசின் முன்னேற்றத்திற்காக உழைக்க உள்ளேன் என்றும் ஆளுநர் ஆர்.என் ரவி கூறியுள்ளார். தமிழ் மொழியை கற்றுக்கொள்ளவும் நான் முயற்சித்து வருகிறேன் என்றும் ஆளுநர் ஆர்.என் ரவி கூறியுள்ளார். மிகக் குறைந்த காலம் பத்திரிகையாளராக பணியாற்றிய அனுபவம் எனக்கு உள்ளது என்றும் ஆளுநர் ஆர்.என் ரவி கூறியுள்ளார். தமிழகத்தில் பணியாற்றுவது என்பது சவாலுக்கு அப்பாற்பட்டது தமிழகத்திற்கு தமிழகத்துக்கு சேவையாற்ற இதுதான் முதல் பணி என்றும் அவர் கூறியுள்ளார்.

அரசியலமைப்பு கொடுத்துள்ள அதிகாரத்திற்கு உட்பட்டு தமிழகத்தில் என் பணிகள் இருக்கும் என்றும் ஆர்.என் ரவி கூறியுள்ளார். தமிழக அரசு சிறப்பாக கொரோனா எதிர்கொண்டு கட்டுப்படுத்தியது  என்றும் ஆளுநர் ஆர்.என் ரவி கூறியுள்ளார். தமிழக அரசின் ஒட்டுமொத்த செயல்பாடு குறித்து கூறுவதற்கு சில கால அவகாசம் தேவை என்றும் அவர் கூறியுள்ளார். மாவட்டந்தோறும் ஆய்வுப் பணிகளுக்கு செல்வது குறித்தெல்லாம் தற்போது எதுவும் கூற இயலாது என்றும் ஆளுநர் ஆர்.என் ரவி கூறியுள்ளார்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top