Connect with us

திட்டப்படி ஜூலை 17ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறும்!!-தேசிய தேர்வு முகமை

neet cancle

செய்திகள்

திட்டப்படி ஜூலை 17ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறும்!!-தேசிய தேர்வு முகமை

நம் தமிழகத்தில் உள்ள அனைவரும் பெரும்பாலும் ஒன்றாக எதிர்ப்பது நீட் நுழைவுத்தேர்வுக்கு தான். ஏனென்றால் இந்த நீட் தேர்வினால் வருடாவருடம் தற்கொலை செய்து கொள்ளும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகமாகவே காணப்படுகிறது.

இது தொடர்பாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அவை ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இருப்பினும் கூட ஜூலை 17ஆம் தேதி திட்டப்படி நீட் தேர்வு நடைபெறும் என்று தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு திட்டப்படி ஜூலை 17ஆம் தேதி நடைபெறும் என்று தகவல் கிடைத்துள்ளது.

கடந்த ஆண்டு கால மருத்துவ கலந்தாய்வு காலதாமதமாக நடைபெற்றதால் நீட் தேர்வை தள்ளிவைக்க கோரிக்கை எழுந்தது.

ஆனால் ஜூலை 17ஆம் தேதி மருத்துவ படிப்புகளுக்கான நீட்தேர்வு திட்டப்படி நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை கூறியுள்ளது. பல்கலைக் கழக பொது நுழைவுத் தேர்வும், ஜே.இ.இ. மெயின் தேர்வும் திட்டப்படி நடைபெறும் என்றும் தேசிய தேர்வு முகமை கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top