Connect with us

ஜூலை 17ஆம் தேதி ‘நீட் தேர்வு’…! ஏப்ரல் 2ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!!

நீட்

News

ஜூலை 17ஆம் தேதி ‘நீட் தேர்வு’…! ஏப்ரல் 2ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!!

ஜூலை 17ஆம் தேதி ‘நீட் தேர்வு’…! ஏப்ரல் 2ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!!

தற்போது அனைத்துப் பட்டப் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு கட்டாயம் என்று காணப்படுகிறது.  அடுத்தடுத்து பல்கலைக்கழகங்களும் நுழைவுத் தேர்வின் அடிப்படையில் தான் மாணவர் சேர்க்கை இருக்கும் என்று அறிவித்துக் கொண்டு வருகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் பல ஆண்டுகளாக போராடிக் கொண்டிருப்பது மருத்துவ படிப்புக்கான  நீட் தேர்வு ரத்து செய்வதுதான். ஆளுநரிடம் தமிழக அரசின் சார்பில் நீட்தேர்வு விலக்கு மசோதாவும் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது ஜூலை மாதத்தில் நீட் நுழைவுத்தேர்வு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலைப் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ஜூலை 17ம் தேதி நடக்கிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஏப்ரல் மாதம் இரண்டாம் தேதி தொடங்குகிறது என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. தமிழ், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நீட் நுழைவுத்தேர்வை எழுத மே 7-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு 16.14 லட்சம் பேர் விண்ணப்பித்தனர் இந்த ஆண்டு 20 லட்சம் பேர் விண்ணப்பிக்க வாய்ப்பு உள்ளதாகவும் காணப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in News

To Top