நேஷனல் ஹெரால்டு அலுவலகத்திற்கு சீல்:அமலாக்கத்துறை அதிரடி!!

டெல்லியில் இருக்கும் நேஷனல் ஹெரால்டு அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேஷனல் ஹெரால்டு வழக்கில் டெல்லியில் இருக்கும் ஐடி நிறுவனம் உள்ளிட்ட 12 இடங்களில் அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இன்றைய தினத்தில் அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அமலாக்கத் துறையினர் அனுமதி இல்லாமல் யாரும் திறக்கக் கூடாது என அமலாக்கத் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி , ராகுல் காந்தி இடம் அமலாக்கத் துறையினர் பல்வேறு கட்டமாக விசாரணை நடத்திய நிலையில் முக்கிய ஆவணங்கள் சரி பார்க்கும் நோக்கத்தில் சீல் வைக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்தியிடம் விசாரணை நடத்தியதற்கு மத்திய அரசை கண்டித்து பல கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தற்போது சீல் வைக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment