தமிழகத்தின் தலைநகரமாக உள்ளது சென்னை மாநகரம். சிங்கார சென்னை, வந்தாரை வாழவைக்கும் பூமி என்று அழைக்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த சில வாரங்களாக தமிழகத்தின் தலைநகரமான சென்னை தண்ணீருக்குள் தத்தளிக்கிறது.
அங்கு பலத்த காற்றும் தொடர்ந்து வீசப்பட்டு வருகிறது. இதனால் சென்னை மக்கள் மட்டுமின்றி இதர மாவட்ட மக்களும் பெரும் சிரமத்தில் வாழ்கின்றனர். இந்த நிலையில் கனமழை காரணமாக தேசியக் கொடி இறக்கப்பட்டது பலருக்கு வேதனையை அளிக்கிறது.
இவை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தேசியக்கொடி ஏற்பட்டதாகக் காணப்படுகிறது. அதன்படி சென்னை புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையத்தில் 100 அடி உயரத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் இருந்து தேசியக் கொடி இறக்கப்பட்டது.
அங்கு 24 மணி நேரமும் தேசிய கொடி பறந்துகொண்டிருக்கும். ஆனால் சென்னையில் தொடர்ச்சியாக பலத்த காற்று வீசுவதால் காற்றின் வேகத்திற்கு ஏற்ப தேசியக்கொடி வேகமாக வீசுகிறது. இதனால் ரயில்வே நிர்வாகம் கொடி கிழிந்து விடுமோ என்றும் சேதமடைந்து என்ற அச்சத்தில் கொடியை இறங்கியதாக கூறியுள்ளனர்.