கதறித்துடித்த காவலர்; களமிறங்கியது தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்!

தவறான சிகிச்சையால் தனது குழந்தையின் கால் பாதிக்கப்பட்டது என்று காவலர் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், இது தொடர்பாக தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இது தொடர்பாக தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையர் ஆர். ஜி.விஜயன் அவர்கள் பேசியபோது, கடந்த வாரங்களில் தன் குழந்தைக்காக தவறான சிகிச்சை அழித்துவிட்டதாக தலைமை காவலர் ஒருவர் சாலையில் போராட்டம் நடத்தி இருந்தார். ஒரு பெற்றோராக அவர்களின் மனநிலையை புரிந்துக் கொள்ள வேண்டும்.ஆணையம் தாமாக முன்வந்து இந்த நிகழ்வை தானாக விசாரணைக்கு ஏற்றது.

மருத்துவர்களுடன் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை நடந்தது.நெப்ராடிக்ஸ் சின்டம் என்ற வியாதியால் குழந்தை பாதிக்கப்பட்டுள்ளது. தவறான சிகிச்சை குழந்தைக்கு கொடுக்கப்பட்டதா என்றால் அது இல்லை, குழந்தையின் கால் வீங்கப்பட்டதால், அவரால் சரியாக நடக்கமுடியவில்லை, அது அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதை பற்றி காவலர் கோதண்டத்திடம் தெளிவாக விளக்கிவிட்டோம்.

ஒரு மருத்துவ குழு அமைத்து நாளை ஆலோசிக்கப்பட்டு அவரது மேல் சிகிச்சைக்கான நடவடிக்கை எடுக்கப்படும். அவருக்காக மாற்றுப் பாதம் அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.