விஜய் சேதுபதியை எட்டி உதைத்த மர்ம நபர்! விமான நிலையத்தில் பரபரப்பு!!

ஆரம்பம் முதலே அடிபட்டு மிகுந்த கஷ்டத்துடன் தற்போது தமிழ் சினிமாவில் மிகப் பெரிய நட்சத்திரமாக ஜொலித்து கொண்டுள்ளவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் ஆரம்ப காலகட்டத்தில் சிறு கதாபாத்திரம், துணை நடிகர் இவ்வாறு நடித்து வந்தாலும் தற்போது இவர் மாஸ் ஹீரோ பட்டியலில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதி

இந்த நிலையில் இவரை மர்ம நபர் ஒருவர் பின்னாலே வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவிக் கொண்டு வருகிறது. இந்த சம்பவம் பெங்களூர் விமான நிலையத்தில் நடந்துள்ளது. அதன்படி அவர் மாஸ்டர் செப் என்ற தனியார் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக உள்ளார்.

அதன் இரண்டு நாள் படப்பிடிப்புக்காக பெங்களூர் சென்றிருந்தார். இந்நிலையில் அங்கு அவருக்கும் ஒரு நபருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

முதலில் காவல்துறையினர் அதனை தடுத்து விட்டாலும் வாக்குவாதம் முடிந்த பின்னர் அந்த மர்ம நபர் பின்னாலே வந்து எட்டி உதைத்தது தெரியவந்துள்ளது. அதன் பின்னர் வாக்குவாதம் காரசாரமாக உருமாறியது. தற்போது அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment