தொடர்ந்து 3 வாரங்களாக ஞாயிற்றுக்கிழமை இரவில் நடக்கும் கொலை; அச்சத்தில் திருப்பூர் மக்கள்!
தினந்தோறும் தமிழகத்தில் கொலைகள் நடந்து கொண்டுதான் வருகிறது. அதுவும் குறிப்பாக இரவு நேரத்தில் கொலைகள் அதிகமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருப்பூர் மாவட்டத்தில் அசாம் மாநில பெண் ஒருவர் கால்வாயில் சடலமாக மீட்கப்பட்டார்.
அவரின் கொலைக்கு அவரது கணவர் மற்றும் நண்பர் தான் காரணம் என்று விசாரணையில் தெரியவந்தது. கொலை செய்த கணவர் அசாம் மாநிலத்துக்கு தப்பி ஓடியதாகவும் விசாரணையில் தெரியவந்தது. இந்த நிலையில் திருப்பூர் மாநகரில் அடுத்தடுத்து சில தினங்களாகவே தொடர்ந்து கொலைகள் நடைபெற்றுக் கொண்டு வருவது அங்குள்ள மக்களை பதைபதைக்க வைத்துள்ளது.
அதன்படி இன்று திருப்பூரில் இளைஞரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதன்படி திருப்பூர் காட்டன் மார்க்கெட் வளாகத்தில் கை, கால்கள் கட்டிய நிலையில் இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இளைஞரின் சடலத்தை மீட்ட காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூர் மாநகரில் தொடர்ந்து மூன்றாவது வாரமாக ஞாயிற்றுக்கிழமை இரவில் அரங்கேறி வரும் கொலைகளால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
