தலைநகர் சென்னையை பொறுத்தவரையில் கொள்ளை சம்பவங்கள் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தாம்பரம் அருகே கெளரிவாக்கத்தில் பிரபல நகை கடை ஒன்றில் கொள்ளை சம்பவம் என்பது நடைப்பெற்றது.
குறிப்பாக இன்று அதிகாலை 4.20 மணியளவில் வடமாநில நபர் ஒருவர் அதிகாலையில் ஷோரூமில் உள்ள தங்கம் மற்றும் வைர நகைகளை கொள்ளையடிக்க நுழைந்துள்ளார். அப்போது கடையில் அலாரம் அடித்ததால் உள்ளே கடையில் மேலாளர் காவலாளிக்கு தகவல் கொடுத்துள்ளார்.
பீகாரில் பயங்கரம்!! ரயில் எஞ்ஜினை திருடிய மர்ம கும்பல்!!
அப்போது உள்ளே வந்து பார்த்தப்போது பல கோடி மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. உடனடியாக சேலையூர் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.. சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
பின்னர் விசாரணை நடத்தியத்தில் கொள்ளையன் அருகில் உள்ள வீட்டில் திருடி இருப்பதும், மாடியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை வீசி சென்றதும் தெரியவந்தது.
ஜல்லிக்கட்டு தடை வழக்கு; விசாரணை நவ.29-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!!
இதனையடுத்து 2 மணி நேரத்தில் கொள்ளையனை பிடித்து தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.