பலரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த சென்னை புத்தகக் கண்காட்சி இன்று தொடக்கம்!!
45- வது சென்னை புத்தக திருவிழா இன்று நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதாகனத்தில் தொடங்குகிறது. முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
தென்னிந்திய புத்தக விற்பனை மற்றும் பதிவாளர் சார்பில் 45- வது நடைபெறும் புத்தகத் திருவிழாவையொட்டி 700 அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளனர்.
இதனிடையே 8 நுழைவாயில் அமைக்கப்பட்டு ஒவ்வொரு நுழைவாயிலும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
காலை 11- மணி முதல் இரவு 8 மணி வரை புத்தக கண்காட்சி நடைபெறும் என பபாசி அறிவித்துள்ளது. முதல் நாளான இன்று மாலை 5 மணிக்கு முதல்வர் ரிப்பன் வெட்டி தொடங்கி வைக்கிறார்.
அதனையடுத்து கலைஞர் விருதுகளையும் பபாசி விருதுகளையும் முதல்வர் வழங்குகிறார். அரங்குகளில் புத்தங்களை அடிக்கி வைக்கும் பணிகளில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறார்கள்.
