பெற்ற குழந்தையை விற்ற தாய்! விசாரணையில் திடுக்கிடும் பின்னணி?

திருச்சியில் பிறந்து குழந்தையை விற்பனை செய்து விட்டு நீதிமன்றத்தில் தவறான தகவலைகூரிய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் லால்குடில் அருகே உள்ள அன்பில் மங்கமாள் புரத்தை சேர்ந்தவர் ஜானகி ( வயது 32). இவர் அதே பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் அலுவலகத்தில் பணி செய்துள்ளார். அப்போது கர்ப்பமான அவருக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளனது.

ஆம்புலன்ஸ் சேவைக்கு பணம் இல்லை: தாயின் சடலத்தை சுமந்த மகன்!

இந்நிலையில் குழந்தைக்கு யார் தந்தை என கேட்டப்போது தெரிவிக்காததால் உடனடியாக சைல்டு லைனுக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். அதே சமயம் குழந்தை காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். காவல்நிலையத்தில் உரிய விசாரணை நடத்தாதல் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

அப்போது வாக்குமூலத்தில் முன்னுக்கு பின் முரணான தகவல்களை ஜானகி தெரிவித்ததால் விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தினர். அதில் வழக்கறிஞர் பிரபு மற்றும் இரண்டாவது மனைவி சண்முகவள்ளி ஆகியோர் குழந்தையை விற்றது அம்பலமானது.

மதுரை: ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோத திருவிழா!

தற்போது ஜானகி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். மேலும், நான்கு மாத குழந்தை பணத்திற்காக விற்பனை செய்தார்களா? அல்லது நரபலி கொடுக்கப்பட்டதா? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.