சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்ற ஆசை அனைத்து நடிகர் மற்றும் நடிகைகளுக்கும் இருக்கும். அதனால் அவர் படத்தில் சிறிய கேரக்டர் கிடைத்தாலும் உடனே சம்மதம் கூறிவிடுவார்கள். அப்படி தான் சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியான அண்ணாத்த படத்தில் அவருக்கு தங்கையாக இளம் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார்.
ரஜினி படம் என்பதால் நிச்சயம் நமக்கு பெரிய அளவிலான ரீச் கிடைக்கும் என கீர்த்தி எதிர்பார்த்தார். ஆனால் மாறாக அவரை நெட்டிசன்கள் டிரோல் செய்து மீம்களை தெரிக்க விட்டனர். மேலும் ரஜினிக்கு மகளாக நடிக்க வேண்டிய கீர்த்தி தங்கையா என்பது போல் பல விமர்சனங்களும் எழுந்தது.
இதனால் கீர்த்தி சுரேஷின் அம்மாவும், ரஜினி பட நாயகியுமான மேனகா பொங்கி எழுந்ததோடு, “என் பொண்ணு ரஜினி சாருக்கு தங்கச்சியா என்ன, ஜோடியாவே நடிப்பா. வாய்ப்பு வந்தால் அது அவளுக்கு அதிர்ஷ்டம்” என சரவெடியாக பேசினார். அதோடு நிற்காமல் ரஜினியின் அடுத்த படத்தில் கீர்த்தியை ஜோடியாக நடிக்க வைக்க ரஜினியிடமே நேரடியாக மேனகா கேட்டு விட்டாராம்.
இதை சற்றும் எதிர்பாராத ரஜினி, “உனக்கே தெரியாதா? நான் ஹீரோயின் ஃபிக்ஸ் பண்றதுல தலையிட மாட்டேன். அதெல்லாம் தயாரிப்பாளர், இயக்குசநர் வேலை” என்று கூறி சைஸாக நழுவிவிட்டாராம். அதுமட்டும் இன்றி அவரின் அடுத்த படம் யாருடன் என்பது தெரியாததால் மேனகாவால் அதற்கு மேல் அந்த முயற்சியில் ஈடுபட முடியவில்லையாம். இல்லையெனில் எப்படியாவது கீர்த்தியை ரஜினிக்கு ஜோடியாக நடிக்க வைத்திருப்பாராம்.
ஆனால் மற்றொரு புறம் ரஜினிக்கே கீர்த்தியுடன் ஜோடியாக நடிக்கும் எண்ணம் இல்லை என கூறப்படுகிறது. தங்கையாக நடித்ததற்கே இப்படி டிரோல் செய்கிறார்கள் இதில் ஜோடியாக நடித்தால் நிச்சயம் மக்கள் ஏற்கமாட்டார்கள் என்பதால் ரஜினி தவிர்த்து விட்டதாக கூறப்படுகிறது.