Connect with us

27 சதவீத இட ஒதுக்கீடு தீர்ப்பு; சமூக வரலாற்றின் மிக முக்கிய வெற்றி!:ஸ்டாலின்

27 சதவீத இட ஒதுக்கீடு

செய்திகள்

27 சதவீத இட ஒதுக்கீடு தீர்ப்பு; சமூக வரலாற்றின் மிக முக்கிய வெற்றி!:ஸ்டாலின்

27 சதவீத இட ஒதுக்கீடு தீர்ப்பு; சமூக வரலாற்றின் மிக முக்கிய வெற்றி!:ஸ்டாலின்

சில நாட்களுக்கு முன்பு உச்சநீதிமன்றம் ஒபிசி பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்திருந்தது. இதற்கு தமிழக முதலமைச்சர் பெருமிதம் கொண்டிருந்தார். அதோடு மட்டுமில்லாமல் இது தமிழக அரசுக்கும் திமுக அரசுக்கு மிகப்பெரிய பரிசு என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார்.

இந்த நிலையில் சமூக வரலாற்றின் மிக முக்கியமான வெற்றி என்றும் அவர் கூறியுள்ளார். இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது செல்லும் என்று உச்சநீதிமன்ற தீர்ப்பு மிகவும் முக்கிய வெற்றி என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறினார்.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு இந்திய சமூக நீதி வரலாற்றில் கிடைத்துள்ள மிக முக்கியமான வெற்றி என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சமூகநீதி, சமவாய்ப்பு அனைத்தையும் ஓரணியில் அணிவகுத்து நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்திலும் துணை நிற்கும் என்றும் அவர் கூறினார்.

இட ஒதுக்கீடு தகுதிக்கு எதிரானது அல்ல என மிக அருமையாக கோடிட்டு காட்டியுள்ளது உச்சநீதிமன்றம் இன்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top