எலிமினேடான பிக்பாஸ் போட்டியாளர்கள் ஆர்ஜேகளாக ரீ என்ட்ரி கொடுக்கும் தருணம்……

தமிழ் பிக் பாஸ் சீசன் 5 நிறைவு பெற இன்னும் சில நாட்களே உள்ளது. இதனால் பெரிய அளவான டாஸ்க்குகள் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படவில்லை. சில நாட்களிலேயே பிக் பாஸ் சீசன் 5  முடிய உள்ள நிலையில் அவர்கள் வெளியே செல்வதற்கு முன்பு அன்பை பகிர்ந்து விட்டு வெளியேறும் படியான டாஸ்க்குகள்  அதிகமாக கொடுக்கப்படுகின்றன.

ஒவ்வொரு சீசனிலும் கடைசி கட்டத்தில் அந்த சீசனில் விளையாடிய போட்டியாளர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்வார்கள். இந்த சூழலில் இன்றைய தினமும் அவ்வாறே வழங்கப்பட்டுள்ளதாக காணப்படுகிறது. அதன்படி 12 லட்ச ரூபாய் பெட்டியோடு வெளியேறிய சிபி மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்கு வந்துள்ளார்.

அவரோடு சேர்த்து சக போட்டியாளராக அபிணையும் வந்துள்ளார். அவர்கள் இருவரும் போட்டியாளர்களாக வராமல் ஆர்ஜேகளாக வந்துள்ளனர். இதனை கண்ட பிக்பாஸ் குடும்பத்தினர் மிகுந்த சந்தோஷத்தோடு அவர்கள் இருவரையும் கட்டியணைத்து பகிர்ந்து கொண்டுள்ளனர்.

இந்த ப்ரமோ இணையதளத்தில் வைரலாக பரவிக் கொண்டு வருகிறது. அதில் சிபி உலகமெங்கும் கலக்கிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் போட்டியில் இருந்து ஜாலியாக நமக்கு புடிச்ச பாட்டு கேட்போம் நான் உங்கள் சிபி என்று கூறினார்.

<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/5CLdhFaxc5w” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture” allowfullscreen></iframe>

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment