வெள்ளியங்கிரி மலையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் உயிரிழப்புகள்!

இந்த ஆண்டு கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலை ஏறிய ஆறு பேர் வெவ்வேறு காரணங்களால் பயணத்தை தொடர முடியாமல் உயிரிழந்துள்ள சம்பவம் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கோவை மாவட்டம் கோலவம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட பூண்டியில் வெள்ளியங்கிரி மலைத்தொடர் அமைந்துள்ளது, ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் வரை பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வெள்ளியங்கிரி மலை ஏறுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

கோடைகாலத்திற்கு பிறகு மழையில் பணி அதிகமாக இருக்கும் என்பதால் அதன் பின்னர் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை, வெள்ளியங்கிரியில் ஏழு மலைகளுடன் மொத்த பயண தூரம் ஆறு கிலோமீட்டர் கரடு முரடான பாறைகள் மற்றும் செங்குத்தான மலை பாதைகளை கடந்து வெள்ளியங்கிரி மலை உச்சியை அடையலாம் ,ஏழு மலைகளில் ஏழாவது மலை தான் மிக கடினமான பயணத்தைக் கொண்டது.

கடந்த சில ஆண்டுகளாக பக்தர்கள் மட்டும் இல்லாமல் மலையேற்றம் ட்ரக்கிங் செல்ல விரும்புபவர்களுக்கு அதிக எண்ணிக்கையில் வந்து செல்வதாக கூறுகின்றன. வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் வனத்துறை சார்பில் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. மலைக்கு செல்பவர்கள் நெகிழி மற்றும் எளிதில் தீப்பற்ற கூடிய பொருள்களை எடுத்து செல்ல அனுமதி இல்லை .

வனத்துறை அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மலை ஏறுபவர்களை பரிசோதித்த பிறகு மேலே அனுப்புகின்றன , இந்நிலையில் சமீபத்தில் மலை ஏறியவர்கள் 6 பேர் உயிரிழந்தனர். 2.3.2023 அன்று திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த 60 வயதான முருகன், 4.3.2023 அன்று சென்னையில் சேர்ந்த 44 வயதான கதிரவன், 30. 4.2023 அன்று புதுச்சேரியை சேர்ந்த 52 வயதான ரமேஷ் என்பவர் 4.5.2019 அன்று கோவையை சேர்ந்த 47 வயதான ஏக மூர்த்தி, 5.52019 அன்று கரூரை சேர்ந்த குமாரு என்பவர் 6.5.2023 அன்று கோவையை சேர்ந்த 39 வயதான லோகேஷ் என்பவரும் மலைகள் ஏறும்போது உயிரிழந்ததாகவும் தெரிகிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த ஆண்டுதான் அதிக அளவிலான இறப்புகள் பதிவாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. பொதுவாக மலை ஏறும் 35 வயதுக்கு குறைவானவர்களுக்கு அதிக பாதிப்புகள் ஏற்படாது. 40 வயது அடைந்தவர்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம் என்று மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சென்னையில் கலவரத்தை ஏற்படுத்திய திருமணம்.. தாய்மாமன் ஊர்வலத்தில் நடந்த வெடிகுண்டு சம்பவம்..

இவ்வளவு கடினமான பயணத்தை மேற்கொள்ளும் போது ரத்த அழுத்தம் அதிகமாகும். சர்க்கரை அளவு சீராக இல்லாதவர்கள் மலையேறும் போது அதிக அளவில் சர்க்கரை குறையும். அப்போது அழுத்தம் அதிகரிக்க வாய்ப்பு உண்டு சிறிய அளவிலான மாரடைப்பு ஏற்படும். மலைப்பகுதியில் அவசர உதவி அல்லது உடனடி சிகிச்சை வழங்குவதற்கான வாய்ப்பு இருக்காது என்பதால் மலை ஏறுபவர்கள் சுய பாதுகாப்புடன் செல்வது அவசியம்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.