நட்சத்திர விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டம் நடந்தால் கண்காணிக்கப்படும்: அமைச்சர் சுப்பிரமணியன்;

புத்தாண்டு வருவதற்கு இன்னும் ஓரிரு தினங்களே உள்ளன. இதற்காக ஒவ்வொரு நாடும் மும்முரமாக தயார்படுத்திக் கொண்டு வருகிறது. ஆனால் இந்தியாவில் உள்ள ஒரு சில மாநிலங்களில் புத்தாண்டு நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டு காணப்படுகின்றன.

ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் அங்கும் இரவுநேர புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை போன்றே காணப்படுகிறது. இருப்பினும் நம் தமிழகத்தில் தற்போது வரை இரவு ஊரடங்கு பற்றி தகவல் வெளியாகவில்லை.

ஆயினும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் பற்றி தமிழகத்தின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். அதன்படி தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் கண்காணிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

நட்சத்திர விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டம் நடந்தால் நிச்சயமாக கண்காணிக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். நட்சத்திர விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டம் பற்றிய அறிவிப்புகள் வராமல் இருப்பது மகிழ்ச்சி என்றும் அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார். பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களை மக்கள் முழுமையாக தவிர்க்க வேண்டும் எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment