நேற்று பதவியேற்ற அமைச்சர் இன்று ராஜினாமா..!! ஒரு நாள் கூட தாங்க முடியாத நிலை!!
இலங்கையில் பெரும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இந்த பொருளாதார நெருக்கடியால் மக்கள் பலரும் இலங்கை அதிபர் வீட்டைச்சுற்றி கலவரத்தில் ஈடுபட தொடங்கி உள்ளனர். இதனால் இலங்கையில் உள்ள அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து வருகின்றனர்.
இவ்வாறு உள்ள நிலையில் இன்று நாடாளுமன்றம் கூடியது. அதன்படி பொருளாதார நெருக்கடி, போராட்டம், அமைச்சரவை மாற்றியமைப்பு உள்ளிட்ட சூழல்களுக்கு மத்தியில் இன்றைய தினம் இலங்கையில் நாடாளுமன்றம் கூடியது.
4 பேர் கொண்ட அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கை நாடாளுமன்றம் கூடியது. இதில் இலங்கை துணை சபாநாயகர் ராஜினாமா செய்துள்ளதாக காணப்படுகிறது. அதன்படி இலங்கை நாடாளுமன்ற துணை சபாநாயகர் ரஞ்சித் சியம்பலபிட்டிய தனது பதவியை ராஜினாமா செய்தார்.
பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை என இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே திட்டவட்டமாக கூறியுள்ளார். பெரும்பான்மை எந்த கட்சி நிரூபிக்கிறது அந்த கட்சியிடம் ஆட்சியை ஒப்படைக்க தயார் எனவும் கோத்தபய ராஜபக்சே திட்டவட்டமாக கூறியுள்ளார்.
இலங்கையில் புதிதாக பதவியேற்ற நிதியமைச்சர் அலி சப்ரி தனது பதவியை ராஜினாமா செய்தார். திங்கட்கிழமை அமைச்சராக பதவி ஏற்ற நிலையில் 24 மணி நேரத்திற்குள் பதவி விலகினார் அலி சப்ரி.
