Connect with us

மக்களிடம் அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும்- தமிழக பாஜக!!

அண்ணாமலை

தமிழகம்

மக்களிடம் அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும்- தமிழக பாஜக!!

எந்த ஒரு அச்சமுமின்றி தமிழகத்தின் ஆளுங்கட்சியாக திமுகவினரை விமர்சிக்கும் திறமையோடு செய்தியாளர்களை சந்தித்து வருபவர்தான் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.

இவர் தற்போது அமைச்சர் பொது மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று செய்தியாளர்கள் மத்தியில் கூறியுள்ளார். அதன்படி சத்துமாவு திட்ட ஒப்பந்த விவகாரத்தில் அமைச்சர் சுப்பிரமணியன் மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

கும்பகோணத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துக்கொண்டிருக்கிறார். பொங்கல் தொகுப்பில் முறைகேடு செய்த நிறுவனம் ஒப்பந்தத்தில் எப்படி கலந்து கொண்டது என விளக்கம் அளிக்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

ஏனென்றால் பல இடங்களில் பொங்கல் பொருட்கள் மோசமான நிலையில் காணப்பட்டது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் இத்தகைய கருத்திற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தக்க பதிலடி கொடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top