Connect with us

ஆளுநரின் அரசியல் பேச்சுக்கு அதிரடியாக பதிலடி தந்த அமைச்சர்..!

RN Ravi PTI

செய்திகள்

ஆளுநரின் அரசியல் பேச்சுக்கு அதிரடியாக பதிலடி தந்த அமைச்சர்..!

தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது

திருக்குறள் மிகப்பெரிய உலகப் பொதுமறை ஆகும் இன்று சதானதவாதிகள் எதற்காக கொக்கரிக்கிறார்கள் என்றால் அவர்கள் இன்று உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்கள் என்ற கோட்பாட்டை உலகுக்கு அறிவுறுத்தியவர்கள் அவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களை மிகவும் கேவலமாக நடத்தியவர்கள் தமிழ் பாரம்பரியத்தின் அடிப்படையில் திராவிட இயக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது

நமது கவர்னர் ரிக் வேதம் பற்றி பேசுகிறார் ரிக் வேதம் எந்த கடவுளையும் பற்றி பேசவில்லை அது ஆத்மாவின் தேடல் ஆதி பகவன் என்பது குறித்து யாரும் கேள்வி எழுப்பவில்லை இன்று மிஷனரிகள் செய்த பணிகளை அவர்கள் அறிய வாய்ப்பில்லை. பல பாஜக தலைவர்கள் இந்த மிஷனரியில் உள்ள கல்வி நிறுவனங்களில் படித்தவர்கள் இதை அதனுடன் தொடர்பு படுத்த நான் விரும்பவில்லை திருக்குறளை அவர்கள் எதிர்பார்த்த விதத்தில் இல்லை அது அவர்களுக்கு மிகப்பெரிய வருத்தமாக உள்ளது

திருக்குறள் ஒரு குறிப்பிட்ட சமயத்தையோ மதசார்புடைய கருத்தையோ கூறி இருந்தால் அதை ஏற்று இருப்பார்களா இருக்கும் அவர்களது பேச்சு விரக்தியின் வெளிப்பாடாக உள்ளது வெளிநாடுகளில் சென்று ஜாதியை கேட்டால் யாருக்கும் தெரியாது சமத்துவத்தை பேசுகின்ற சமயம் பொறுமைகளை சமயங்களை உள்வாங்குகின்ற பக்குவத்தை நாம் பெற்றிருக்கிறோம் என்ற உண்மையைத்தான்

சுவாமி விவேகானந்தர் பேசியிருக்கிறார் இந்துக்களாகிய நாங்கள் அனைத்து சமயத்தையும் ஏற்றுக் கொள்கிறோம் என்று அவர் அமெரிக்காவில் மாநாட்டில் பேசியுள்ளார் என்றார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top