அடுத்த 5 நாளுக்கு தமிழ்நாட்டில் அடித்துப் பெய்யப் போகுது மழை! அறிவித்தது வானிலை ஆய்வு மையம்;

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தது. அதன் பின்னர் மெல்ல மெல்ல மழை குறைய தொடங்கியது. இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு தமான வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

வானிலை மையம்

அதன்படி இன்று இன்று கடலோர மாவட்டங்களில் மழை வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வடகிழக்கு பருவக்காற்றால் தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் இன்று மழை வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழ்நாட்டின் உள் மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. நாளைய தினம் தமிழ்நாடு,புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

டிசம்பர் 13ஆம் தேதி கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. டிசம்பர் 14 ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு  மையம் கூறியுள்ளது.

டிசம்பர் 15ஆம் தேதி தென்மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் மழைக்கு வாய்ப்பு வானிலை மையம் கூறியுள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு  மையம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment