காலை முதலே வரிசை கட்டி நின்ற மாணவர்கள்; விறுவிறுப்பாக தொடங்கியது மருத்துவப்படிப்பு கலந்தாய்வு!

பொதுவாக பட்டப் படிப்புகளுக்கு பல்கலைக்கழக சார்பிலோ அல்லது கல்லூரியின் சார்பில் நுழைவுத் தேர்வு நடைபெறும். பல ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் அளவுக்கு பெரும் தடையாக காணப்படுவது நீட் நுழைவுத்தேர்வு தான்.

இந்த நிலையில் நீட் நுழைவுத் தேர்வை எதிர்த்து அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. அனைத்துக் கட்சி கூட்டத்தின் சார்பில் ஒரு மனதாக நீட் மசோதா விளக்கம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு அனைத்து கட்சி கூட்டத்தை சார்பில் மத்திய அமைச்சரை சந்தித்ததாகவும் தகவல் வெளியானது. இன்றைய தினம் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது.

இதில் முதற்கட்டமாக அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. மாநில ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு வருகிற 27-ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடத்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆண்டு மதுரை எய்ம்ஸ் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment