Connect with us

மேயர், நகராட்சி தலைவர்-மார்ச் 4 ஆம் தேதி மறைமுக தேர்தல்! தீவிரம் காட்டும் திமுக;

திமுக

தமிழகம்

மேயர், நகராட்சி தலைவர்-மார்ச் 4 ஆம் தேதி மறைமுக தேர்தல்! தீவிரம் காட்டும் திமுக;

மேயர், நகராட்சி தலைவர்-மார்ச் 4 ஆம் தேதி மறைமுக தேர்தல்! தீவிரம் காட்டும் திமுக;

நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மறுபடியும் தனது பெரும்பான்மையை நிரூபித்துள்ளது. ஏனென்றால் சட்டப்பேரவை தேர்தலில் திமுக பெரும்பான்மை நிரூபித்து ஆட்சியை பிடித்துள்ளது ,அதேபோல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் தனது பெரும்பான்மையை நிரூபித்து அனேக இடங்களை திமுக கைப்பற்றியுள்ளது.

அதிலும் குறிப்பாக 21 மாநகராட்சிகள் அனைத்திலும் திமுகவே வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 21 மாநகராட்சி மேயர்கள் நியமனம் குறித்து தேர்வு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

21 மாநகராட்சி மேயர், துணை மேயர்கான நபர்களை தேர்வு செய்யும் பணியில் திமுக ஈடுபட்டுள்ளது. 134 நகராட்சி தலைவர், துணைத்தலைவர் 435 பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர்களையும் தேர்வு செய்ய திமுக தீவிரம் காட்டிக் கொண்டு வருகிறது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வென்ற திமுகவினர் பட்டியலை கட்சித் தலைமைக்கு அனுப்பும் பணி நடக்கிறது. தலைமைப் பொறுப்புகளுக்கு போட்டியிடுபவர்கள் முதல்வர் ஸ்டாலின் இறுதி செய்து அறிவிக்க உள்ளார்.

உள்ளாட்சி அமைப்புகளில் வென்றவர்களை சந்தித்து முதலமைச்சர் அறிவுறுத்தல்களையும் அளிக்க உள்ளார். கூட்டணி கட்சியினரும் தலைமைப் பொறுப்புகளை எதிர்பார்ப்பு பட்டியலை திமுகவிடம் அளிக்க உள்ளனர்.

மேயர், நகராட்சித் தலைவர் உள்ளிட்டோரை தேர்வுசெய்யும் மறைமுக தேர்தல் மார்ச் 4ஆம் தேதி நடைபெறுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top