Connect with us

முகக்கவசம் அணியாவிட்டால் 500 ரூபாய் அபராதம்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

Capture 21

தமிழகம்

முகக்கவசம் அணியாவிட்டால் 500 ரூபாய் அபராதம்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

கொரோனாவின் தொற்றானது இந்தியா முழுவதும் அச்சுறுத்தி வந்த நிலையில் அரசின் பல்வேறு கட்டுப்பாடுகளால் பாதிப்பு எண்ணிக்கையானது படிபடியாக குறைய தொடங்கியது.

இந்நிலையில் மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத், உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் தொற்று பராலானது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதன் எதிரொலியாக தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு மீண்டும் வேகமெடுக்க தொடங்கியுள்ளது.

இந்த சூழலில் தொற்றுப்பரவலை கட்டுப்படுத்த முக கவசம் மற்றும் தனி மனித இடைவெளி கடைபிடிப்பது கட்டாயம் என்ற அறிவிப்பானது வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் அந்தந்த ஆட்சியர்கள் அறிவித்திருந்தனர்.

தற்போது கோயம்புத்தூர் மாவட்டத்திலும் முக கவசம் அணிவது கட்டாயம் என அம்மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதோடு வணிக வளாகங்கள் மற்றும் உணவகங்களில் கிருமிநாசினி கட்டாயம் பயன்படுத்த கடைகளுக்கு முன் வைக்கப்பட வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும், இத்தகைய உத்தரவை மீறுபவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top