கடைசி நிமிடத்தில் நின்ற திருமணம்…. திருமண வீட்டார் செய்த செயல்…. நெகிழ்ந்த உறவினர்கள்…..

வீட்டை கட்டி பார் கல்யாணத்தை செஞ்சு பாருனு பெரியவங்க ஒரு பழமொழி சொல்லுவாங்க. அது என்னமோ உண்மை தாங்க. ஒரு கல்யாணத்தை பண்றதுக்குள்ள நாக்கு தள்ளிடுது. இப்படி செலவு செஞ்சு தடபுடலா ஒரு கல்யாணம் பண்ணும்போது கடைசி நிமிஷத்துல அந்த கல்ய்ணம் நின்னுபோயிட்டா எப்படி இருக்கும்.

அப்படி ஒரு சம்பவம் தான் வேலூர்ல நடந்திருக்கு. வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சண்முகப்பிரியா (வயது 25) என்பவருக்கும் குச்சிப்பாளையத்தைச் சேர்ந்த பாலமுருகன் (வயது 31) என்பவருக்கும் இருவீட்டார் இணைந்து திருமணம் பேசி இருந்தனர். கடந்த மாதம் நிச்சயம் முடிந்த நிலையில், நேற்று இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற இருந்தது.

மாப்பிள்ளை அழைப்பு, பாட்டு கச்சேரி, திருமண வரவேற்பு என வெகுவிமரிசையாக திருமண ஏற்பாடுகள் நடந்து முடிந்தது. இந்நிலையில் நேற்று காலை தாலி ஏற இன்னும் சில நேரமே இருக்கும் சூழலில் மணப்பெண் சண்முகப்பிரியா கல்யாணம் செய்துகொள்ளமாட்டேன் என மறுப்பு தெரிவித்துள்ளார்.

திருமணத்திற்கு இன்னும் சில மணி நேரங்களே உள்ள நிலையில், இவ்வாறு கூறியதை கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும் அவரை சமாதானப்படுத்தி எப்படியாவது திருமணத்தை நடத்தி முடித்துவிடலாம் என முயற்சி செய்துள்ளனர். ஆனால், தன் முடிவையும் மீறி தனக்குத் திருமணம் செய்து வைத்தால் தற்கொலை செய்துகொள்வேன் என கூறியதோடு, மாப்பிள்ளையை பிடிக்கவில்லை என்று கூறி தாலியை மேடையில் இருந்து தூக்கி எறிந்துள்ளார் மணப்பெண்.

இதனால், வேறு வழியின்றி உறவினர்களிடம் மன்னிப்பு தெரிவித்து கல்யாணத்தை நிறுத்துவதாக மணப்பெண் வீட்டார் அறிவித்தனர். ஆனால், திருமண விழாவிற்கு வந்த உறவினர்களுக்காக அறுசுவை உணவு தயாராக இருந்ததால், உணவை வீணாக்க வேண்டாம் என இருவீட்டாரும் உறவினர்களிடம் கேட்டுக்கொள்ள இரு தரப்பு சொந்தங்களும் காலை திருமண பந்தியை முடித்துவிட்டு அமைதியாக மண்டபத்தை விட்டு வெளியேறினர்.

கடைசி நேரத்தில் திருமணம் நின்றுபோனது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் திருமணத்திற்கு வந்த சொந்தங்கள் வெறும் வயிற்றோடு செல்ல கூடாது என அனைவரையும் உட்கார வைத்து உணவு பரிமாறிய திருமண வீட்டாரின் செயல் நெகிழ வைத்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment