Connect with us

கழிவுநீர் அடைப்பை சரி செய்தவர் உயிரிழப்பு-ரூ.15 லட்சம் நிதியுதவி!!

உயிரிழப்பு

தமிழகம்

கழிவுநீர் அடைப்பை சரி செய்தவர் உயிரிழப்பு-ரூ.15 லட்சம் நிதியுதவி!!

நம் தமிழகத்தில் நிவாரணம் என்பது அடுத்தடுத்து வழங்கப்பட்டு வருகிறது. அதுவும் குறிப்பாக ஏதேனும் விபத்தின் மூலம் உயிரிழந்தால் அவர்கள் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்குவதை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உன்னிப்பாக கவனித்து செய்து கொண்டு வருகிறார்.

அதிலும் குறிப்பாக பட்டாசு தொழிற்சாலைகளில் தீ விபத்தில் உயிரிழப்பு, திருவிழாவின்போது மின்கம்பம் அருந்து உயிரிழந்தோர்களுக்கு நிவாரணத் தொகையை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.

இந்த நிலையில் கழிவுநீர் அடைப்பை சரி செய்தபோது தொழிலாளி உயிரிழந்துள்ளார். அவரின் குடும்பத்திற்கு தலா 15 லட்சம் நிதியுதவியினை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார்.

அதன்படி சென்னை மாதாவரத்தில் கழிவுநீர் அகற்றும்போது இறந்த தொழிலாளி குடும்பத்திற்கு 15 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்த ஒப்பந்த தொழிலாளர் நெல்சன் குடும்பத்திற்கு நிதி அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின். நெல்சனை இழந்து துக்கத்தில் இருக்கும் குடும்பத்திற்கு இத்தகைய நிதி உதவி ஆறுதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top