தற்போது சென்னையில் அதிக அளவு வழிப்பறி செயின் பறிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் நிகழ்கிறது. இதில் மர்ம நபர்கள் பலரும் ஈடுபட்டது உண்மைதான். இந்த நிலையில் தங்கப்பதக்கம் வாங்கிய ஒருவர் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
அதன்படி மிஸ்டர் இந்தியாவாக இருந்த இளைஞன் இன்று கொள்ளையர் ஆக மாறியுள்ளார். தனியாக சாலையில் நடந்து கொண்டு நடந்து செல்லும் பெண்களிடம் செயின் பறித்த இளைஞன் பற்றிய தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி பைக் சென்னையில் பைக்கில் ஹெல்மெட் அணிந்திருந்த 10 சவரன் தங்க செயினை பறித்து சென்றான். சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து கிட்டத்தட்ட 4 கிலோ மீட்டர் வரைக்குமான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
சனிக்கிழமை மாலை கொரட்டூரில் தனியாக நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு சென்ற நபர் சிசிடிவி காட்சியில் சிக்கினார். இருவேறு சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளை சென்னை போலீசார் தங்களது வாட்ஸ் அப் குழுக்களில் பகிர்ந்தனர்.
இரண்டு செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டது ஒரே நபர் தான் என்பதையும் கண்டுபிடித்தனர். சவுகார்பேட்டையில் இளைஞன் தங்க நகையை உருக்க வந்ததாக தகவல் கிடைத்தது.
ஏழுகிணறு போலீசார் விசாரணையில் அந்த நபர் மண்ணடியை சேர்ந்த முகமது பைசல் என்பது தெரியவந்தது. இரண்டு சங்கிலி பறிப்பு சம்பவங்களில் தொடர்புடைய நபர் முகமது பைசல் தான் என்பதும் தெரியவந்தது.
கடந்த 2020ஆம் ஆண்டு B.tec பொறியியல் படிப்பை முடித்த முகமது பைசல் அகில இந்திய அளவிலான இளைஞருக்கான ஆணழகன் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தன்னுடைய நண்பர் ஒருவர் மூலமாக துபாயிலிருந்து ஐ-போனை வாங்கிய நண்பர் ஒருவருக்கு விற்றுருக்கிறான். ஐபோன் விற்று அதில் லாபம் கிடைக்கவே பலரும் முகம்மது செல்போன் வாங்கித் தருமாறு கேட்டுள்ளனர்.
நிறைய நண்பர் போனை வாங்கி விற்று வந்திருக்கிறார் முகம்மது பைசல் நண்பன் ஒருவன் அதிக அளவில் ஐபோன்களை வாங்கிவிட்டு பணத்தை கொடுக்காமல் ஏமாற்றினர். ஏமாற்றதால் பெரும் கடனாளியாக இருக்கிறார் முகமது பைசல்.
கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுக்க வழிப்பறி திருட்டு ஈடுபட முடிவு செய்ததாகவும் கூறியுள்ளார். தாயாருடைய இருசக்கர வாகனத்தில் நம்பர் பிளேட்டுகளை அகற்றிவிட்டு திருட்டில் ஈடுபட்ட முகமது பைசல் முடிவெடுத்துள்ளார்.
முகத்தை மறைக்க ஹெல்மெட் அணிந்து கொண்டு பூக்கடை பகுதியில் 10 சவரன் தங்க நகையை பறித்து சென்றதும் முகமது பைசல் என்பதும் தெரியவந்தது. அந்த சம்பவத்தில் போலீசாரிடம் சிக்காததால் அடுத்ததாக கொரட்டூரில் செயின் பறிப்பில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது. இறுதியாக சிசிடிவியில் பதிவான முகம்மது பைசல் இருசக்கர வாகனம் அவனை காட்டி கொடுத்துள்ளது.