Connect with us

’40 நமதா? எதுக்கு பெஞ்சை தேய்த்ததுதான் மிச்சம்’ திமுகவை சாடிய அதிமுக முக்கிய புள்ளி

admk

தமிழகம்

’40 நமதா? எதுக்கு பெஞ்சை தேய்த்ததுதான் மிச்சம்’ திமுகவை சாடிய அதிமுக முக்கிய புள்ளி

அண்ணா பிறந்தநாள் விழா கூட்டத்தின் மூலம் அரசுக்கு  வேண்டுகோள் வைப்பதாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சேலத்தில் பேச்சு

திமுக ஆட்சியை ஊடகமும், பத்திரிக்கையும்தான் தூக்கி பிடிக்கின்றன. 16 மாத கால ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை. தினந்தோறும் அரசுக்கு ஆதரவாக செய்தி வெளியிடப்படுகிறது. பத்திரிக்கையும், ஊடகமும் இல்லையென்றால் திமுக ஆட்சி காணாமல் போய்விடும். முதலமைச்சர் ஆய்வுக்கு செல்லும்போது கால்விரிப்புகள் போடப்படுகிறது. ஏற்கனவே நமக்கு நாமே நிகழ்ச்சியின்போது ஷூ போட்டுக் கொண்டு விவசாய நிலங்களுக்கு சென்ற நவீன விவசாயியாக ஸ்டாலின் உள்ளது.

பொங்கல் தொகுப்பு வழங்கியதில் 600 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடைபெற்று இருக்கிறது. ஏழைகளுக்கு வழங்கும் பொங்கல் தொகுப்பில் கூட ஊழல் செய்தவர்களை எப்படி ஏற்க முடியும். இதுகுறித்து எந்த ஊடகத்திலும் செய்தி வரவில்லை. இப்போதும் அதிமுகவையும், என்னையும் விமர்சனம் செய்து விவாத மேடை நடத்துவதுதான் ஊடகத்தின் பணியாக உள்ளது. புகழேந்தி என்பவர் அதிமுகவில் இல்லை.

சட்டப்பேரவைத் தேர்தலின்போது 900 வாக்குகள் தான் பெற்றார். நோட்டாவை விட குறைவான வாக்குகளை பெற்ற சக்தி வாய்ந்த புகழேந்தியை வைத்து அவதூறு செய்தி பரப்புகிறார்கள். அதிமுகவை பற்றி பேசாத நாளே இல்லை. சில ஊடகங்கள் நன்றாக செயல்படுகின்றனர். சிலர் திமுகவிற்கு பினாமியாக செயல்படுகின்றனர். நாட்டு மக்களின் பிரச்சினைகளை எடுத்து சொன்னால்தான் நன்மை கிடைக்கும். என்னை பற்றி பேசினால் என்ன நடக்கும் ஒன்றும் நடக்காது.

அதிமுகவில் மட்டும்தான் ஜனநாயகம் இருக்கிறது. சாதாரண விவசாயி கூட அதிமுகவில் பொறுப்பிற்கு வர முடியும்.திமுகவில் வர முடியாது. இப்படி பேசினால் அடுத்த நாளே ஆட்சியை கவிழ்த்து விடுவார்கள். அதிமுகவை எவராலும் அழிக்க முடியாது. அழிக்க நினைப்பவர்கள் அழிந்து போவார்கள். அம்மா மினி கிளினிக், தாலிக்கு தங்கம், முதியோர் உதவித் தொகை என அதிமுக ஆட்சியின் திட்டங்களை நிறுத்தி விட்டார்கள்.

உழைக்கும் திறனற்ற 5 லட்சம் பேருக்கு வழங்கப்பட்ட முதியோர் உதவித் தொகையை நிறுத்தப்பட்டதை மீண்டும் வழங்க வேண்டும். ஊர் ஊராக போய் மனுக்கள் வாங்கி முதலமைச்சர் ஸ்டாலின் எந்த குறையும் தீர்க்கவில்லை. மகளிருக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இது ஏமாற்று வேலை. கேஸ் சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு மானியம் வழங்கப்படவில்லை. கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை.

முதியோர் உதவித் தொகை ஆயிரத்தில் இருந்து 1500 ஆக உயர்த்தவில்லை. 100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாளாக உயர்த்த வில்லை. பெண் ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்தப்படவில்லை. திருடன் கையில் சாவியை கொடுத்தது போல ஆட்சியை திமுகவிடம் கொடுத்துவிட்டதாக பொதுமக்கள் புலம்புகிறார்கள். பெட்ரோல் டீசல் விலையை குறைக்கவில்லை. மத்திய அரசு குறைத்தபிறகு 25 மாநிலங்கள் விலையை குறைத்தபிறகும் தமிழ்நாட்டில் திமுக அரசு குறைக்கவில்லை.

நாடாளுமன்றத் தேர்தலில் 38 இடங்களில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் பெஞ்சை தேய்த்ததுதான் மிச்சம். மக்களுக்காக எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை. அதிமுக எம்பிக்கள் 21 நாட்கள் காவிரி பிரச்சினைக்காக நாடாளுமன்றத்தை முடக்கினர். ஆனால் வருமான வரி சோதனைக்கு பயந்து திமுக எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் வாய் திறக்கவே மறுக்கின்றனர்.

மத்திய அரசிதழில் நீட் தேர்வினை வெளியிட்டது காங்கிரஸ் கட்சி. திமுகவைச் சேர்ந்த காந்திசெல்வன் மத்திய இணை அமைச்சராக இருந்தபோதுதான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. ஆனால் பொய்யை மெய் போல பேசுகிறார்கள். 2017-ல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டதால் 5 ஆயிரம் இடங்கள் மருத்துவக் கல்வியில் புதிதாக உருவாக்கப்பட்டன.ஏழை எளிய குடும்பங்களை 500-க்கும் மேற்பட்டோர் மருத்துவக் கல்வி பயில அதிமுக ஆட்சியே காரணம். அவர்களுக்கான கல்விக் கட்டணத்தை அரசே முழுமையாக ஏற்றது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top