
பொழுதுபோக்கு
புஷ்பா 2 படத்தின் ஸ்கிரிப்ட் பணியில் இணைந்த முக்கிய பிரபலம் யாரு தெரியுமா?
தெலுங்கு மொழியில் வெளியான அதிரடி பரபரப்புத் திரைப்படம் தான் புஷ்பா. இந்தப் படத்தில், அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிக்க பகத் பாசில் தெலுங்கில் அறிமுகமாகி வில்லனாக நடித்திருப்பார், ராஷ்மிகா மந்தண்ணா ஹீரோயினாக நடித்திருப்பார் .
தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கும் இப்படம் 17 டிசம்பர் 2021 தெலுங்கிலும், மலையாளம், தமிழ், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
தற்போழுது புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் உருவாக தயாராகி வருகிறது. முதல்பாகத்தை விட இன்னும் பிரம்மாண்டமாய் அதிரடி ஆக்க்ஷன் உடன் கூடிய அசத்தலான கதையில் இந்த படம் தயாராக உள்ளது.மேலும் நடிகர் விஜய் சேதுபதியிடம் இப்படத்தில் வில்லனாக நடிப்பதற்காக பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் பிரமாண்ட பொருட்ச்செலவில் வெளியாகும் ‘புஷ்பா’ படத்தின் இரண்டாம் பாகம் 10 மொழிகளில் உருவாகயுள்ளது. அதனால் இந்த கதை குறித்து இயக்குனர் சுகுமார் மிகுந்த கவனமாக உள்ளார்.
தற்போழுது இந்த படத்தில் ஸ்கிரிப்ட் பணி நடைபெற்று வருகிறது, இந்நிலையில் உப்பென’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான புச்சிபாபு சனா சுகுமாருடன் மீண்டும் இணைந்துள்ளார். முன்னதாக புச்சிபாபு சுகுமாரிடம் இணை ஆசிரியராகவும் எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார்.
தற்போழுது உப்பென படத்திற்கு பிறகு என்டிஆரிடம் ஒரு ஸ்கிரிப்டை விவரித்து நடிக்கவும் ஒப்புதல் பெற்றார். ஆனால் என்டிஆர் படத்தை 2023 இல் தான் புச் பாபுவின் தொடங்க முடியும். அதற்கு நிறைய நேரம் இருப்பதால், புச்சிபாபு மீண்டும் சுகுமாரின் எழுத்துக் குழுவில் இணைந்து ‘புஷ்பா 2’ படத்தின் ஸ்கிரிப்டிங் பணியில் ஈடுபட்டுள்ளார்.
இந்தியன் 2 படத்திற்காக அமெரிக்கா செல்லும் கமல்ஹாசன்? படப்பிடிப்பு எப்போ தெரியுமா ?
சுகுமார் தனது உதவியாளர்கள் மற்றும் எழுத்தாளர்களிடமிருந்து யோசனைகளை எடுத்துக்கொள்கிறார். தற்போது மீண்டும் சுகுமார் இயக்கத்தில் ‘புஷ்பா 2’ படத்தில் இணைந்துள்ளார். ‘புஷ்பா 2’ படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அல்லு அர்ஜுன் நாயகனாக நடிக்கிறார்.
