தனுஷின் அடுத்த படத்தின் முக்கிய அறிவிப்பு: நாளை ரசிகர்களுக்கு விருந்து

2fcde5709e5d9dde0e0d0d97248845b2

பிரபல நடிகர் தனுஷ் நடித்து வரும் 43வது படத்தை இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் முடிவடைந்துவிடும் என்று கூறப்படுகிறது 

இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நாளை காலை 11 மணிக்கு ரிலீசாகும் என இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. இதனை அடுத்து தனுஷ் ரசிகர்கள் குஷி ஆகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

நாளை வெளியாகும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை எதிர்பார்த்து ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். தனுஷ் ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ள இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் சமுத்திரக்கனி, ஸ்மிருதி வெங்கட் உள்பட பலர் நடித்துள்ளனர். ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.