யாரும் இல்லாத நேரத்தில் பணிப்பெண் செய்த செயல்…. திடீரென வந்த முதலாளி… அடுத்து நடந்தது என்ன?

தமிழ் சினிமாவில் தளபதி விஜய் மற்றும் ஷாலினி நடிப்பில் வெளியான சச்சின் என்ற படத்தில் ஷாலினி அவரது வீட்டில் வசீகரா பாடலுக்கு ஆட்டம் போட்டு கொண்டிருப்பார். அப்போது விஜய் எதிர்பாராமல் அங்கு வந்து அவரது ஆட்டத்தை ரசித்து கொண்டிருப்பார். பின்னர் விஜய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஷாலினி நீ எப்போ வந்த என்று கேட்பார்.

தற்போது அப்படி ஒரு சம்பவம் தான் தென்கொரியாவில் நடந்துள்ளது. அதாவது நமக்கு பிடித்த பாடலோ இசையோ கேட்டால் நாம் எங்கு இருக்கிறோம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை மறந்து ஒரு சிலர் ஆட்டம் போட தொடங்கி விடுவார்கள். இன்னும் சிலர் தனியாக இருக்கும் போது பிடித்த பாடலை போட்டு ஆடுவார்கள்.

அதேபோல் தென்கொரியாவில் உள்ள தேநீர் விடுதி ஒன்றில் இளம்பெண் ஒருவர் தனியாக தரையைத் துடைத்து கொண்டிருந்தார். அப்போது பின்னணியில் ஒலித்த பிரபல பாப் பாடலை கேட்ட அந்த பெண் கையில் இருந்த துடைப்பத்தை கீழே போட்டு விட்டு “ஏ டண்டனக்கா. டணக்குனக்கா” என குத்தாட்டம் போட தொடங்கியுள்ளார்.

எந்தளவிற்கு என்றால் கதவை திறந்து முதலாளி உள்ளே நுழைவதை கூட கவனிக்காத அளவிற்கு அப்பெண் நடனத்தில் மூழ்கி இருந்துள்ளார். பின்னர் திடீரென முதலாளி நிற்பதை கவனித்த அப்பெண் என்ன செய்வதென தெரியாமல் தலையை குணிந்தபடி தரையில் கிடந்த துடைப்பானை கையில் எடுத்துள்ளார்.

அவ்வளவு தான் நம்ம வேலை போச்சு என அந்த பெண் பயத்தில் உறைந்திருந்தார். ஆனால் அந்த முதலாளியோ சிறிதும் அந்த பெண் மீது கோபப்படாமல் அவருடைய நடனத்தை பாராட்டி கை தட்டியுள்ளார். இணையத்தில் வெளியான இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அந்த முதலாளியை பாராட்டி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment