செய்திகள்
ஆவின் பால் முறைகேடு: 2018-19 வரையிலான ஆண்டில் 10 கோடிக்கு விளம்பரங்களில் முறைகேடு!
அனைவருக்கும் உணவுப்பொருள் பட்டியலில் முதலில் வைப்பது சாதத்தோடு சேர்த்து பால் தான். ஏனென்றால் தபாலில் கால்சியம் மிகுந்து காணப்படுகிறது மேலும் பல குழந்தைகளுக்கும் இவையே உணவுப் பொருளாகவும் காணப்படுகிறது. இத்தகைய பாலில் அவ்வப்போது கலப்படம் நிகழ்வது மிகுந்த வேதனை அளிக்கிறது மேலும் இவை குழந்தைகளுக்கு பல்வேறு விதமான நோய்களை உண்டாக்குகிறது. தமிழகத்திலேயே குறைவான விலையில் விற்கப்படுகின்றன நிறுவனம் என்றால் அதனை ஆவின் என்றே கூறலாம்.
மேலும் திமுக தேர்தல் அறிக்கையில் ஆவின் பால் விலை விலை உழைப்பும் தேர்தல் வாக்குறுதியாக காணப்பட்டது அதன் தொடர்ச்சியாக திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஆவின் பால் விலை குறைக்கப்பட்டது. சாமானிய மக்களுக்கு மிகுந்த பிரயோஜனமாக காணப்பட்டது இத்தகைய சூழலில் அப்போதும் இந்த ஆவின் பாலில் சில முறைகேடு நடப்பதாக கூறப்படுகிறது. ஆவின் நிறுவனத்தில் முறைகேடு தொடர்பான புகாரில் ஆவணங்கள் மாயமானது தற்போது கண்டுபிடிக்கப் பட்டதாக தகவல் வெளியாகிறது.
அதன்படி 10.37 கோடியில் 4.40 கோடி செலவுக்கான 78 கோப்புகள் மட்டுமே ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் 5.90 கோடிக்கான கோப்புகள் அளிக்கவோ அல்லது தொலை செய்யப்பட்டுள்ளதாகவும் பால்வளத்துறை தகவல் அளித்தது. மேலும் விசாரணை அதிகாரி அலெக்ஸ் சிவதாஸ் சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்க எடுக்க பால் வளத் துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். மேலும் முறைகேட்டில் ஈடுபட்ட ஆவின் தணிக்கைத் துறை அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கக்கோரி உத்தரவிடப்பட்டுள்ளது 2018 முதல் 19 வரையிலான ஆண்டில் 10 கோடிக்கு ஆவின் விளம்பரங்களில் முறைகேடு நடந்த புகாரில் நடவடிக்கை எடுப்பதாக கூறப்படுகிறது.
